TamilsGuide

கமேனிக்கு பிறகு கொல்லப்பட்ட முக்கியப் புள்ளி - உறுதிப்படுத்தியது ஈரான்

ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவை, அரச தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, அந்த நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் அரசியல் தலைவரான அலி லாரிஜானி கொல்லப்பட்ட செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த முக்கிய விபரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தெஹ்ரான் நேரப்படி நேற்று அதிகாலை 3:30 மணியளவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானிய அதிகார மையத்தின் மிக முக்கிய தூணாகக் கருதப்பட்ட ஒருவரை இழந்திருப்பது அந்த நாட்டிற்குப் பெரும் பின்னடைவாகும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
 

Leave a comment

Comment