TamilsGuide

வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை - ஈரானை புகழ்ந்த டிரம்ப்

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஈரான் ஒரு மிகப்பெரிய வல்லரசு நாடு என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில், வளைகுடா நாடுகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் சரணடைவதற்குப் பதிலாகத் திருப்பித் தாக்கினர். அவர்களுக்கு மிகப்பெரிய வலிமை உள்ளது" என்று தெரிவித்தார். திடீரென ஈரானை டிரம்ப் புகழ்ந்து பேசியது சர்வதேச அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. 
 

Leave a comment

Comment