TamilsGuide

எனக்கெல்லாம் இந்த தேர்தல் செட் ஆகாது - நடிகர் விஜய் சேதுபதி

பியாண்ட் பிக்சர்ஷ் நிறுவனம் தயாரிப்பில் மரிய இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஹேப்பிராஜ். படத்தில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் அவருக்கு ஜோடியாக கவுரிபிரியா நடிக்க மேலும் அப்பாஸ், ஜார்ஜ் மரியம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். வருகிற 27-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர்கள் விஜய்சேதுபதி, கவின், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம்.தமிழ்குமரன், செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன் பேசும்போது, “விஜய் சேதுபதியிடம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்குமாறு சொன்னேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்” என பேசினார்.

தொடர்ந்து விஜய்சேதுபதி பேசியதாவது:-

தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்குமரன் அணிக்கு வாழ்த்துகள். நமக்கெல்லாம் தேர்தல் செட்டாகாது. ஏன் வேண்டாம் என்று தமிழ் குமரனிடம் சொன்னேன். இப்போது மீண்டும் சொல்லி விடுகிறேன். ஏதாவது பஞ்சாயத்து என உட்கார்ந்து அந்த பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்க போய் அப்புறம் நம் படத்திற்கு ஏதாவது செஞ்சிடுவார்களோ என்ற பயத்தில் தான் அப்படி சொன்னேன். பொறுப்பு என்று ஒன்று கொடுத்தால் அந்த பொறுப்பை பொறுப்பாக செய்ய வேண்டும். இந்த படத்தை தயாரித்துள்ள பியாண்ட் பிக்சர்ஷ் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா அற்புதமான தொழில். யார் என்ன சொன்னாலும் பயப்படவே பயப்படாதீர்கள். தயாரிப்பாளர்களான நீங்கள் வியாபாரத்தையும் கதையையும் படிக்க வேண்டும். படத்தின் டிரெய்லர் நன்றாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் எப்பவுமே ஸ்கூல் பையனாகவே நடிக்கலாம். இன்னும் 50 வருடம் கழித்தாலும் அவர் ஸ்கூல் பையனாகதான் நடித்துக் கொண்டிருப்பார். அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறினார். 
 

Leave a comment

Comment