மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி 1988ல் சென்னை இ.சி.ஆர் பகுதியில் வாங்கிய சொத்துக்கு, போலி வாரிசு சான்றிதழ் மூலம் மூன்று பேர் உரிமை கோருவதாக அவரின் கணவர் போனி கபூர் குற்றம்சாட்டியுள்ளார்.
மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் உரிமை கோருவதாக போனி கபூர் தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், போலி வாரிசுச் சான்றிதழை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவி 1988ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாங்கிய 4.77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கொண்டாடி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மூவர் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் தொடர்ந்த மனு மீது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


