--ஞானபீட விருதின்
மதிப்பறிந்த
மாண்புமிகு முதலமைச்சர்
இல்லம் தேடிவந்து
உள்ளம் மகிழவைத்தார்
என்னவொரு எளிமை!
முதலமைச்சர் என்ற
தோரணை இல்லை
ஆளும் தலைவன் என்ற
ஆரவாரம் ஏதுமில்லை
ஒரு சகோதரராய்
சமகால நண்பராய்
இயல்பாய் இனிமையாய்
வருகை தந்தார்
கலைஞர் வெற்றிடத்தை
நிரப்ப வந்தேன் என்று
சொல்லாமல் சொல்வதுபோல்
பொன்னாடை பூட்டினார்;
புத்துணர்ச்சி கூட்டினார்
தேன் சிறிது கலந்த
தேநீர் அருந்தினார்
ஞானபீடத்தின்
வரலாறு கேட்டார்
ஞானத்தின் உயரமும்
பீடத்தின் ஆழமும்
அறிந்துகொண்டார்
வாசல்வரை சென்று
வழியனுப்பினேன்
அவர் விடைகொண்டதும்
யானை கடந்துபோன வீதிபோல்
வெறிச்சோடிப் போயிற்று
எனது கூடம்.
கவிப்பேராசு வைரமுத்து


TamilsGuide
மாண்புமிகு முதலமைச்சர் இல்லம் தேடிவந்து உள்ளம் மகிழவைத்தார்...
