சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்யின் விலை 03 சதவீதத்தால் அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 106.50 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
அதேபோல், டபிள்யூ.டி.ஐ (WTI) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98 அமெரிக்க டொலராக உள்ளது.


