இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் பக்கோடா வாங்க சென்ற கணவனை தவிக்கவிட்டு, பேருந்து நிலையத்தில் இருந்து புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்த பிரீதம் சிங் என்பவருக்கும், ரிம்ஜிம் என்ற 18 வயது பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
ஹோலி பண்டிகைக்காக தாய் வீடு சென்றிருந்த மனைவியை அழைத்துக்கொண்டு, மார்ச் 9 அன்று பிரீதம் சிங் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
மொராதாபாத் மாவட்டத்தின் பிலாரி பேருந்து நிலையத்தில் அடுத்த பேருந்துக்காக காத்திருந்தபோது, ரிம்ஜிம் தனக்கு பசிப்பதாக கூறி சூடாக பக்கோடா வாங்கி வருமாறு கணவரிடம் கேட்டுள்ளார்.
மனைவியின் ஆசைப்படி அருகில் இருந்த கடைக்கு பிரீதம் சென்றார். சில நிமிடங்களில் அவர் பக்கோடாவுடன் திரும்பி வந்தபோது, ரிம்ஜிம் அங்கிருந்து மாயமாகியிருந்தார். அதிர்ச்சியடைந்த கணவர் அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது மனைவியின் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அவர் சென்றிருக்கலாம் என பிரீதம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் புதுமணப்பெண் காணாமல் போயுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


