TamilsGuide

ஈரான் தலைவர்களை கொல்வதை பெரிய கவுரவமாக கருதுகிறேன் - டிரம்ப்

கடந்த பிப்ரவரி 28, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் காயம்பட்டு கோமா நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே ஈரான் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், மொஜ்தபா காமெனி ஒரு வேளை காயமடைந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் ஏதோ ஒரு வடிவத்தில் உயிருடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஈரானின் ஆட்சியை நாம் ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மற்றும் பிற வகைகளிலும் முழுமையாக அழித்து வருகிறோம்.

ஈரானின் கடற்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் விமானப்படை இனி இல்லை. ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் பிற அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன. ஈரானின் தலைவர்கள் பூமியின் முகப்பிலிருந்தே துடைத்தெறியப்பட்டுள்ளனர்.

கடந்த 47 ஆண்டுகளாக அவர்கள் உலகம் முழுவதும் அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். தற்போது, அமெரிக்காவின்47-வது அதிபராகிய நான் அவர்களை அழித்து வருகிறேன். அவ்வாறு செய்வது எத்துணை ஒரு பெரிய கவுரவம்" என்றார். 
 

Leave a comment

Comment