TamilsGuide

போர் சூழலுக்கு மத்தியில் இலங்கையில் குவிந்த வெளிநாட்டு பயணிகள்

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 06 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 623,651 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

 வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியப் பிரஜைகளே முதலிடத்தில் உள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 115,772 ஆகப் பதிவாகியுள்ளது.

அதேபோன்று, பிரித்தானியாவிலிருந்து 66,164 பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 56,114 பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், ஜெர்மனியிலிருந்து 45,939 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 39,725 பயணிகளும் இக்காலப்பகுதிக்குள் வருகை தந்துள்ளதோடு பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment