TamilsGuide

ஈரான் தாக்குதலில் பிரான்ஸ் இராணுவ அதிகாரி பலி

ஈராக்கின் வடக்குப் பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில், பிரான்ஸ் இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்ததுடன், பல வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமது நாட்டு வீரகள் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தமைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எர்பில் பிராந்தியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே ஆறு பிரான்ஸ் வீரர்கள் இத் தாக்குதலில் காயமடைந்ததாக பிரான்ஸ் இராணுவம் நேற்று (12) தெரிவித்தது.
 

Leave a comment

Comment