அமெரிக்க கடற்படையின் முதன்மை போர்க் கப்பல் ஆபிரகாம் லிங்கனை தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஈரானின் அறிக்கை வெளியான சில நிமிடங்களில் பென்டகன் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலின் புகைப்படத்தை வெளியிட்டு, ’ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’க்கு தொடர்ந்து உதவி செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் ஆபிரகாம் லிங்கன் அருகில்கூட வரவில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
மேலும், இத்துடன் அரபிக் கடலில் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிக்கும் 6-க்கும் மேற்பட்ட அதிநவீன போர்க் கப்பல்களை அமெரிக்கா நிலை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,


