TamilsGuide

ஈராக் இராணுவ முகாமிலிருந்து இத்தாலியப் படைகள் வெளியேற்றம்

வடக்கு ஈராக்கின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட குர்திஷ் பிராந்தியத்தில் அமைந்துள்ள இத்தாலிய இராணுவ முகாம் மீது அண்மையில் ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள தனது அனைத்துப் பணியாளர்களையும் தற்காலிகமாக வெளியேற்ற இத்தாலி முடிவு செய்துள்ளது.

இந்த வெளியேற்றமானது திடீர் முடிவு அல்ல என்றும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதி என்றும் இத்தாலிய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் ஈராக்கில் இத்தாலியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்புச் சூழல் மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த வெளியேற்றம் இடம்பெறுவதாக இத்தாலிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment