TamilsGuide

பிணையில் விடுவிக்கப்பட்ட 6 சந்தேக நபர்கள் தலைமறைவு – நீதிமன்றில் ஆஜராகாவிடின் சொத்துக்கள் முடக்கப்படும்

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் , வழக்கு தவணைகளுக்கு ,முன்னிலையாகாத நிலையில் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் வழக்கு தவணைகளுக்கு முன்னிலையாக நிலையில் அவர்களுக்கு எதிராக திறந்த பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது தொடர்ந்து தலைமறைவாக உள்ளமையால் , பொலிஸாரினால் கைது செய்து மன்றில் முற்படுத்த முடியாத நிலைமை காணப்பட்டது.

அதனை அடுத்து குறித்த நபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றிலையோ , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலையோ தோன்றுமாறும் , தவறும் பட்சத்தில் அவர்களின் பெயரில் உள்ள அசையும் , அசையா ஆதனங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்று அறிவித்துள்ளது.

குறித்த அறிவித்தல்கள் , சந்தேகநபர்களின் வசிப்பிடம் , அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பொது இடங்கள் என்பவற்றில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒலிபெருக்கிகள் ஊடாகவும் பொலிஸார் அறிவித்தல்களை வழங்கியுள்ளனர்.
 

Leave a comment

Comment