TamilsGuide

பணிக்கு சமுகமளிக்குமாறு மின்சார சபை ஊழியர்களுக்கு உத்தரவு

மின்சார சபை தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வழக்கம்போல் தங்கள் கடமைகளைத் தொடருமாறு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக புதிதாக நிறுவப்பட்ட இரண்டு மின்சாரத் துறை நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (EDL) மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர் (NTNSP) ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவம் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைப் பகிர்வுத் திட்டத்தின்படி, அனைத்து மின்சார சபை ஊழியர்களும் உரிய 4 நிறுவனங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். 

தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் சட்டப்பூர்வமாகத் தமது கடமைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment