TamilsGuide

கனடாவில் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

கனடாவின் அல்பர்ட்டா (Alberta) மாகாணத்தில் வாகன இருக்கைப் பட்டி (Seatbelt) அணியாத சாரதிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்தி அந்நாட்டு காவல்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த புதிய விதிமுறை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை அல்பர்ட்டாவில் இருக்கைப் பட்டி அணியாமல் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 162 டொலர் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த அபராத் தொகை 211 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும், இருக்கைப் பட்டி மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக சுமார் 2,338 சாரதிகளுக்கு கனடிய பொலிஸ் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தின் போது காயங்களின் தீவிரத்தைக் குறைக்க இருக்கைப் பட்டியைச் சரியாக அணிவது அவசியம் எனப் போலீசார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பொழுதுபோக்கு மற்றும் ஆஃப்-ரோடு (Off-road) வாகனங்களுக்கும் இந்த இருக்கைப் பட்டி விதிகள் பொருந்தும் என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, பாதுகாப்பு கருதி சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் இருக்கைப் பட்டியைத் தவறாமல் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  
 

Leave a comment

Comment