TamilsGuide

டிரம்ப் வெற்றி மிரட்டல்களுக்கு அஞ்சோம் - ஈரான் பதில் எச்சரிக்கை

ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக எண்ணெய் கொண்டு செல்வதற்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அந்த நாட்டுக்கு எதிராக வொஷிங்டன் "20 மடங்கு கடுமையான தாக்குதலை" நடத்தும் என ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர்மட்ட சபையின் செயலாளர் அலி லாரிஜானி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அலி லாரிஜானி தனது 'X' தளத்தில் , ஈரானிய மக்கள் உமது வெற்று மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உம்மை விட அதிக பலம் வாய்ந்தவர்கள் கூட ஈரானை அழிக்க முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளனர்" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எச்சரிக்கையாக இருங்கள், சிலவேளை உமது அழிவு உம்மாலேயே ஏற்படக்கூடும்" என அவர் ட்ரம்பிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளாதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றது.

ஹோர்முஸ் ஜலசந்தியை மையப்படுத்தி அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த வார்த்தைப் போர் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment