TamilsGuide

துபாயில் இந்தியர்கள் இலவசமாக தங்க அடுக்குமாடி குடியிருப்பை வழங்கிய தொழில் அதிபர்

மத்திய கிழக்கில் போர் காரணமாக விமான போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. துபாயில் விமான போக்குவரத்து பாதிப்பால் இந்தியர்கள் உள்பட பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்தியர்கள் தங்களது ஓட்டல் முன்பதிவு முடிந்து விட்டதால் அங்கு தங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய வம்சாவளி தொழில் அதிபர் ஒருவர் உதவி உள்ளார்.

துபாயில் மிசான் குழுமத்தின் தலைவரான இந்திய வம்சாவளியை சேர்ந்த யோகேஷ் தோஷி, துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் இலவசமாக தங்கி கொள்ள தனது 64 குடியிருப்புகளை கொண்ட கட்டிடத்தை வழங்கி உள்ளார்.

உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இந்த அடுக்குமாடி குடியிருப்பு இந்தியர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக யோகேஷ் தோஷி கூறும் போது, அடுக்குமாடி குடியிருப்பை இலவசமாக வழங்கும் முயற்சி இந்திய மக்கள் மன்றம்-ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இது 125-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடம் கிடைக்க உதவியுள்ளது. 
 

Leave a comment

Comment