TamilsGuide

அன்றும் இன்றும் என்றும் கொண்டாடப்படும் கர்ணன்

தமிழ் சினிமாவில் புராண படத்தில் பல புதுமைகளோடு நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் ரசிகர்களால் அன்றும் இன்றும் என்றும் கொண்டாடப்படும் 'கர்ணன்' வெற்றி திரைப்படம் சென்னை சாந்தி திரையரங்கில் 62 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசான காட்சி இது!
உச்ச நடிகர்கள் சிவாஜி என்.டி.ஆர் மற்றும் சாவித்திரி அசோகன் தேவிகா ஆகியோர் நடிப்பில் சகாப்தம் படைத்தனர்.
முக்கிய காட்சிகள் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனைகளிலும் போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக குருக்ஷேத்திரத்திலும் படமாக்கப்பட்டன.
சிறப்பம்சமாக இதில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த பல வீரர்கள் பல காட்சிகளில் இடம் பெற்றிருந்தனர் .
படத்திற்கு ஒலிப்பதிவு இசை இரட்டையர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோரால் அற்புதமாக இசையமைக்கப்பட்டது.
பாடல் வரிகளை கவியரசு கண்ணதாசன் எழுதி தமிழகமெங்கும் பிபலமானது.
தயாரிப்பு மற்றும் இயக்கம்: பி.ஆர். பந்துலு (பத்மினி பிக்சர்ஸ்)
திரைக்கதையை ஏ.எஸ். நாகராஜன் எழுதியுள்ளார், வசனங்களை சக்தி டி.கே. கிருஷ்ணசாமி எழுதியுள்ளார் .
1964 ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையின் போது வெளியிடப்பட்ட இந்த படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது,
அக்காலத்திலேயே பிரம்மாண்ட காவியத் திரைப்படமான 'கர்ணன்' சுமார் ₹40 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டது. அந்த காலத்திலேயே பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றது இப்படம்.
தமிழ்நாட்டில் இருந்த மிகப்பெரிய தியேட்டரான மதுரை தங்கம் மற்றும் சென்னை சாந்தி உள்ளிட்ட பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இதன் தற்போதைய வசூல் மதிப்பு சுமார் ₹500 கோடிக்கும் மேல் என கணக்கிடப்படுகிறது.
சிறப்பாக மதுரை தங்கம் திரையரங்கில் மட்டுமே 14 வாரங்கள் ஓடி ₹186,805 வசூலித்தது.

இராம ஸ்ரீநிவாஸன்

Leave a comment

Comment