TamilsGuide

ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு- ஒருவர் கைது

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அண்மையில் ஒருவரைக் கொலை செய்து, இரண்டு சிறுவர்களை காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் உடவலவ பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் உடவலவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில்‍ கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment