TamilsGuide

சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை அடுத்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் குறிப்பிடத்தக்க திருத்தத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசலின் விலை லிட்டருக்கு 22 ரூபா அதிகரித்து ரூ.303 ஆகவும், சூப்பர் டீசல் லிற்றருக்கு 24 ரூபா அதிகரித்து 353 ரூபாவாகவும் உள்ளது.

92 ஒக்டேன் பெற்றோல் 24 ரூபாவும் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் 25 ரூபாவாகும் அதிகரித்து, புதிய விலைகளின்படி  முறையே 317 ரூபா மற்றும் 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 13 ரூபா அதிகரித்து 195 ரூபாவா உள்ளது.

இதற்கிடையில், சிபெட்கோ விலைகளுக்கு ஏற்ப லங்கே ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது.

திருத்தப்பட்ட புதிய விலைகள் பின்வருமாறு:

ஒட்டோ டீசல் – 303 ரூபா  (22 ரூபா அதிகரிப்பு)

சூப்பர் டீசல் – 353 ரூபா  (24 ரூபா அதிகரிப்பு)

ஒக்டோன் 92 பெற்றோல்– 317 ரூபா  ( 24 ரூபா அதிகரிப்பு)

95 ஒக்டேன் பெற்றோல் – 365 ரூபா (25 ரூபா அதிகரிப்பு)

மண்ணெண்ணெய்– 195 ரூபா (13 ரூபா அதிகரிப்பு)
 

Leave a comment

Comment