TamilsGuide

எண்ணெய் சந்தையில் பெரும் மாற்றம் - புடின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி சந்தைகளில் தற்போதைய போர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பயன்படுத்தி, ரஷ்ய நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கிரெம்ளினில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய புடின், யுக்ரைன் போர் உலக அளவில் கடுமையான எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் எண்ணெய் போக்குவரத்து விரைவில் முற்றாக ஸ்தம்பிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், ஐரோப்பிய கொள்வனவாளர்கள் அரசியல் கலப்பற்ற "நீண்டகால அடிப்படையில்" ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருந்தால், அதனை ரஷ்யா வரவேற்கும் என்றும் புடின் கூறியுள்ளார்.

உலக அளவில் எண்ணெய் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்திலுள்ள ரஷ்யா, இயற்கை எரிவாயு இருப்பில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment