TamilsGuide

ஈரான் போர் குறித்த கனடாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு

ஈரான் போர் விவகாரத்தில் கனடா அரசின் “குழப்பமான” நிலைப்பாடு குறித்து கடும் கேள்விகள் எழும் என முன்னாள் வெளியுறவு அமைச்சர் லொயிட் எக்ஸ்வோர்த்தி தெரிவித்துள்ளார்.

ஈரானைச் சுற்றியுள்ள போர்நிலையைப் பற்றிய விவாதம் இன்று கனடா  நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் தாக்குதல் என்பது ஒரு குற்றம். அந்த அடிப்படை கேள்வியில் கனடா எங்கு நிற்கிறது என்பது இன்னும் தெளிவாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஜேன் செரிடின் தலைமையிலான அரசில் 1996 முதல் 2000 வரை லொயிட் வெளியுறவு அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

கனடா தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், தற்போதைய பிரதமர் மார்க் கார்னி, ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் கனடா நேரடியாக ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தாலும், வளைகுடா நாடுகளுக்கு பாதுகாப்பு உதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைப்பாட்டை “மிகவும் குழப்பமானது” என்று குறிப்பிட்ட லொயிட், எந்தவொரு இராணுவ உதவியும் வழங்கப்பட்டால் அது கனடா போரில் நேரடியாக ஈடுபடுவதாகப் புரிந்துகொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு பதிலாக, மத்திய கிழக்கில் சிக்கியுள்ள கனடியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதிலும், மோதலை முடிவுக்கு கொண்டுவருவதிலும் கனடா கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment