TamilsGuide

ரசிகர்களால் சேதமடைந்த ஜூனியர் என்.டி.ஆர். திறந்து வைத்த மருத்துவமனை

பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்றிருந்தார். பெங்களூருவில் கட்டப்பட்டு இருந்த கிம்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று (மார்ச் 8) நடைபெற்றது. இதனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பங்கேற்றது அந்த விழாவுக்கு வந்தவர்களை திணறடித்தது.

ஜூனியர் என்.டி.ஆர். மருத்துமனையை திறந்து வைக்கும் தகவல் அறிந்து அங்கு கூடிய ரசிகர்களால் பரபரப்பான சூழல் உருவானது. மிகக் குறுகிய இடத்தில் ஒரே நேரத்தில் ரசிகர்கள் திரண்டதால், மருத்துவமனைக்குள் தள்ளுமுள்ளு சூழல் உருவானது. அளவுக்கு அதிகமான கூட்டத்தை கட்டுப்பட்டுத்த முடியாமல் விழா ஏற்பட்டாளர்கள் திணறினர்.

இதையடுத்து காவல் துறையினர் கூட்டத்திற்குள் நுழைந்து ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ காண ஒன்று திரண்ட ரசிகர்களால் திறப்பு விழாவுக்காக தயாராகி இருந்த நகரும் படிக்கட்டுகள் உள்பட மருத்துவமனை உள்கட்டமைப்புகள் சேதமடைந்தது.

புதிய மருத்துவமனை திறப்பு விழாவின் போது திடீரென அளவுக்கு அதிகமான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடியது, அங்கு கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது.
 

Leave a comment

Comment