TamilsGuide

தவெக தலைவர் #Vijay வாகனத்தை விரட்டும் ரசிகர்களுக்கு நடிகர் விமல் அட்வைஸ்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் போதெல்லாம் அவரது வாகனத்தை ரசிகர்கள் பின்தொடர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

அண்மையில் தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, விபத்தில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நடிகரை பிடிக்கும் என்றால் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உயிரை பணயம் வைத்து வாகனத்தை விரட்டி பின்தொடராதீர்கள் என்று விஜய் வாகனத்தை விரட்டும் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார். 

Leave a comment

Comment