யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை சுருவில் கடற்கரைப் பகுதியில் பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சுமார் 368 கிலோ கிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக இலஙகை கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த பெறுமதியானது 73 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஊர்காவற்துறை, வேலனி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மற்றும் படகுடன் மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


