TamilsGuide

கட்டார் வான்பரப்பு பகுதி அளவில் திறப்பு

கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர் முதற்தடவையாக மட்டுப்படுத்தப்பட்ட விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்துக்காக (Cargo) மட்டுமே இவ்வாறு வான்பரப்பு திறக்கப்படுவதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கட்டாரின் பிரதான சர்வதேச விமான நிலையமான ஹமாட் (Hamad) விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் நாட்களில் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற் கொண்டு ஏனைய விமானச் சேவைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்திற்குள் ஈரான் தரப்பிலிருந்து கட்டார் விமான நிலையத்தை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்ட போதிலும், அதனை முறியடிக்ககட்டாருக்கு முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment