TamilsGuide

விஜய் மிரட்டுகிறார் - சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா சமீபத்தில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் விஜய் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார். மனுவில்  வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.

சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் பின்னர் நேற்று முன் தினம் நடைபெற்ற திருமண நிகழ்வில் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து ஒரே நிற ஆடையில் விஜய் கலந்துகொண்டார்.

இது இணையத்தில் வைரலானது, இந்நிலையில் சங்கீதா புதிய மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்  “விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதால் தற்போது சென்னையில் வசிக்க வீடு இல்லாமல் இருக்கிறேன். நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரி பாதி உரிமை உள்ளது. எனவே விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்.

இதை பற்றி நான் விஜய்யிடம் பேச முற்படும் போது விஜய் என்னை வழக்கறிஞர் மூலமாக மிரட்டுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே தாக்கல் செய்த முதல் மனுவில் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment