TamilsGuide

ஏதிலிகள் தொடர்பில் கனடிய நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

பெண் ஏதிலிக் கோரிக்கையாளர்கள் மீது வேறுபடுத்தப்பட்ட நடைமுறைகள் கொண்டு அவர்கள் குறைந்த கட்டண  பகல்நேர பராமரிப்பு இடங்களைப் பயன்படுத்துவதில் கியுபெக் மாகாணம் தடைகள் விதித்தது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கனடிய உச்ச நீதிமன்றினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பில், இந்தத் தீர்ப்பு கியுபகெ் மாகாண அரசுக்கு எதிரான மூன்றாவது முடிவாகும்.

விரிவான தீர்ப்பில், நீதிமன்றம் கூறியது, “ஏதிலிகள் குழந்தைகளுக்கான குறைந்த கட்டண சிறுவர் பராமரிப்பு சேவையைப் பெற முடியாமல் வைக்கப்படுவது, அவர்களை சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படும் நிலையில் வைத்துவிடும் அபாயத்தை உருவாக்குகிறது” என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு, காங்கோ குடியரசு பெண் ஒருவரால் தங்குமிடக் கோரிக்கை (asylum) செய்யப்படும்போது தொடங்கியது. அவர் வேலை அனுமதி பெற்றிருந்தார். ஆனால், அவருடைய மூன்று பிள்ளைகளுக்கான குறைந்த கட்டண சிறுவர் பராமரிப்பு நிலைய சலுகை வழங்க அரசாங்கம் மறுப்பு வெளியிட்டது.

இதற்கான காரணம், கியுபெக் விதிகள், ஏதிலிக்கு அதிகாரப்பூர்வமான அந்தஸ்து (refugee status) வழங்கப்பட்ட பின்னர் மட்டுமே சேவையை அனுமதிக்கும் விதிப்பாடுகளை கொண்டிருந்தது.

இந்தச் சேவையில் இடங்கள் மிகவும் தேவைப்படும் நிலையில், ஒரு நாளைக்கு சுமார் 9 டொலர் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment