ஈரான் மீது நடைபெறும் போர் மேலும் தீவிரமாகினால், மத்திய கிழக்கு பகுதிக்கான எரிபொருள் ஏற்றுமதி “வாரங்களில் நிறுத்தப்படும்” என கட்டார் எச்சரித்துள்ளது.
கட்டாரின் எரிசக்தி அமைச்சர் ஸாட் அல் காபீ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதனால் உலக எரிசக்தி சந்தைகள் கடும் குழப்பத்தில் ஆழும் என அவர் எச்சரித்துள்ளார்.
போர் இன்னும் சில வாரங்கள் தொடர்ந்தால், “உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தித் தொகை (GDP growth) பாதிக்கப்படும்” என்றும் கூறினார்.
எல்லோருக்கும் எரிசக்தி விலை உயரும். சில தயாரிப்புகளில் தட்டுப்பாடு ஏற்படும், விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படும் எனுவும் தெரிவித்துள்ளார். ஈரானின் தாக்கங்கள் பெரும்பாலும் எரிசக்தி உற்பத்தி கட்டமைப்புகளை குறிவைத்து வருகிறது, இது வாயு விலை உயர்வை ஏற்படுத்தி உலகளாவிய கவலை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரின் திரவ வாயு உற்பத்தி உலகளாவிய உற்பத்தியின் சுமார் 20% ஆகும் மற்றும் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் தேவையை சமநிலைப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
“போர் தொடர்ந்தால், அருகிலுள்ள எல்லா ஏற்றுமதி நிறுவனங்களும் Force Majeure (அவசரநிலை காரணமாக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படும் சட்ட நிபந்தனை) அறிவிக்க வேண்டியிருக்கும்.
போர் முடிந்தாலும், கட்டார்ர் வழக்கமான வழங்கல் நிலைக்கு வாரங்கள் முதல் மாதங்கள் வரை திரும்ப வர நேரிடும் என தெரிவித்துள்ளார்.


