TamilsGuide

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் ஈரானின் பாதாள வளாகம் தகர்ப்பு

ஈரான் தலைநகர் இஸ்ரேலின், 50 விமானங்கள் நேற்று நடத்திய மிகப்பெரிய தாக்குதலில், அங்குள்ள அரசு தலைவர்களின் பாதாள வளாகம் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஈரானுக்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக போர் நீடிக்கிறது. இந்நிலையில், பாதாள வளாகத்தை இஸ்ரேல் விமானப்படை நேற்று தாக்கியது.

இது குறித்து, விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் டெஹ்ரானின் மையப்பகுதியில் கமேனி அலுவலகத்தின் கீழ் பாதாள வளாகம் உள்ளது .

போர் காலத்தில் ஈரான் தலைமை அதிகாரிகள் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இது பயன்படுத்தப்பட்டது. இந்த வளாகத்தை குறிவைத்து, 50 போர் விமானங்கள் நேற்று அதிகாலை நடவடிக்கையில் இறங்கின.

ராணுவ புலனாய்வு, 'மொசாட்' உளவு அமைப்பின் தகவல்களை அடிப்படையாக வைத்து பாதாள வளாகம் தகர்க்கப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள் ளது. 
 

Leave a comment

Comment