TamilsGuide

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைவோருக்கு ஈரான் விடுக்கும் எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்தால், அவைகளும் ஈரானின் தாக்குதலுக்குள்ளாகும் 'சட்டபூர்வ இலக்குகளாக' கருதப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மஜித் தக்-ராவஞ்சி அளித்த பேட்டியின் போது இந்தக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

"ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் ஏதேனும் ஒரு நாடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்தால், அந்த நாடுகளும் ஈரானின்  இலக்குகளாகவே கருதப்படும்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போரில் ஐரோப்பிய நாடுகள் நடுநிலை வகிக்க வேண்டும் அல்லது விலகி இருக்க வேண்டும் என்பதை ஈரான் இந்த அறிவிப்பின் மூலம் வலியுறுத்தியுள்ளது.

அதே சமயம், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் "நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை" நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment