நடிகர் சதீஸ் நடிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் உருவான முஸ்தபா முஸ்தபா படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
தனியார் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றும் சதீஷ், டாக்டராக இருக்கும் மோனிகா சின்னகொட்லாவை காதலிக்கிறார். இரு குடும்பங்களும் இந்த காதலை ஏற்றுக்கொண்டு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணத்திற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகிறது.
இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில், அந்த வீடியோவை எப்படியாவது இணையத்தில் இருந்து நீக்க முயற்சி செய்கிறார் சதீஷ். இறுதியில் சதீஷின் முயற்சி வெற்றி பெற்றதா? அந்த வீடியோவை யார் வெளியிட்டார்கள்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் கதை.
இந்நிலையில், முஸ்தபா முஸ்தபா பட விழாவில் பேசிய நடிகர் சதீஷ், "முஸ்தபா முஸ்தபா என்ற தலைப்பு மாதிரி ஈரானும் இஸ்ரேலும் அமெரிக்காகவும் முஸ்தபா முஸ்தபா பாடல் பாடி ஒன்று சேரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று தெரிவித்தார்.


