இஸ்ரேல்- ஈரான் போரில் மத்திய கிழக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளைத் தாக்குவதற்குத் தேவையான ரகசிய உளவுத் தகவல்களையும் ஆதரவையும் ரஷ்யா, ஈரானுக்கு வழங்கி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், ரஷ்யா வழங்கும் இந்த உளவுத் தகவல்கள், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை ஈரான் இன்னும் துல்லியமாக இலக்கு வைப்பதற்கான திறனை மேம்படுத்த உதவுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை ரஷ்யாவிற்கும் ஈரானுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த புதிய ஒத்துழைப்பு, அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் கூர்மையான கவனத்தை ஈர்த்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன


