TamilsGuide

கனடாவில் 6 ஆண்டுகளாக தேடப்பட்ட நபர் கைது

கனடாவில் கடந்த ஆறு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கியுபகெ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீபென் பியுமொன்ட் என்ற நபர் அல்பேர்ட்டா மாகாணத்தில் கைது செய்யப்பட்டதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

குறித்த நபர்  2015 ஆம் ஆண்டு கியுபகெ் சிட்டி பகுதியில் அதிகளவு கொக்கைன் விநியோகித்த போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் தடுத்து வைக்கும் நிபந்தனைகளில் தளர்வு வழங்கப்பட்டபோதும், விடுதலை நிபந்தனைகளை அவர் பின்பற்றவில்லை.

அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அவர் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறு ஆண்டுகளாக நடைபெற்ற தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பின்னர் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர் மாகாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் சிறைக் காவலில் ஒப்படைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை மாகாண பொலிஸார் உள்ளிட்ட பல பாதுகாப்பு அமைப்புகளின் இணைந்த நடவடிக்கையால் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

Leave a comment

Comment