• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் திலகம் எம்ஜிஆர் நவநாயகிகளுடன் ஜொலித்த நவரத்தினம் வெளிவந்தது.

சினிமா

05-03-77 இதே தினம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நவநாயகிகளுடன் ஜொலித்த நவரத்தினம் வெளிவந்தது..

"நவரத்தினம்" ஏபிஎன் எத்தனையோ படங்கள் தயாரித்தார். ஆனால் அவரது படங்களில் வசூல் சாதனை செய்த படமென்றால் அது "நவரத்தினம்" தான். முதல் வார வசூலில் மதுரை தங்கத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை செய்த ஒரே படம் "நவரத்தினம்". முதல் வார வசூல் சுமார் ரூ83000. நினைத்துப் பார்க்கவே தலை சுற்றுகிறதா?"நவரத்தினம்" படத்தின் இரண்டு வார வசூலில் பல மாற்று நடிகரின் 100 நாட்கள் படங்களின் வசூல் அடக்கமாகி விட்டது என்பது கூடுதல் தகவல்.

"நவரத்தினத்தி"ன் 62 நாட்கள் வசூலில் அவரது வெள்ளிவிழா படங்களே அடங்கி போனதன் மூலம் "நவரத்தினத்தி"ன் வெற்றியை எதிர்முகாம் புரிந்து கொள்ளுமா?. "நவரத்தினம்" வெற்றி கொண்டது அய்யனின் பட்டரை வசூலை. உண்மையான வசூல் யாருக்கு தெரியும். "ராஜா"வின் அதிகாரபூர்வமான இரண்டு வார வசூலை பந்தாடி மகிழ்ந்த "நவரத்தினம்". ஏதோ பெரிய திரையரங்கமான தங்கத்தில் வெளியானதால்தான் இந்த வசூல் சாதனை என்று எண்ண வேண்டாம்.

தங்கத்தில் எந்த ஒரு படமும் தொடர்ச்சியாக ஒரு வாரம் கூட ஹவுஸ்புல் ஆனதில்லை. அதிகபட்சம் "நவரத்தினம்" எக்ஸ்டிரா காட்சிகளுடன் முதல் வாரம் 95 சதவீதத்துக்கும் அதிக பார்வையாளர்கள் வந்ததால்தான் இந்த வசூலை எட்ட முடிந்தது. தங்கம் திரையரங்கின் மொத்த பார்வையாளர்கள் 2593. மற்ற திரையரங்குகளின் பார்வையாளர்கள் 1500 ஐ ஒட்டியே இருக்கும். மற்ற திரையரங்குகளை காட்டிலும் சுமார் 1000 பார்வையாளர்கள் அதிகம்.அதிலும் தங்கத்தில் 80 பைசா டிக்கெட்

மட்டுமே சுமார் 1000 ஐ தாண்டும். ஆக மற்ற திரையரங்கை காட்டிலும் வசூல் சுமார் ரூ1000 அதிகமிருக்கும்.

அதே தங்கத்தில் வெளியான அய்யனின் பல படங்களின் வசூலையும் பாருங்கள். 40 லட்சம் செலவில் உருவான "கர்ணனி"ன் வசூல் மற்றும் 80 லட்சம் செலவில் உருவான "சிவந்த மண்"ணின் சென்ட்ரல் சினிமா வசூல் தங்கத்தில் வெளியான "அன்னை இல்லம்"

"எங்க மாமா" போன்ற படங்களின் வசூலையும் பாருங்கள். "எங்க மாமா" பொங்கலுக்கு வந்ததால் அதிகப்படியான எக்ஸ்டிரா காட்சிகள் நடைபெற்றதால் முதல் வாரத்தில் ரூ57000 வந்தவுடன் அய்யனின் கைஸ்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து வால்போஸ்டர் அடித்து கொண்டாடினர்.

"எங்கமாமா" இரண்டாவது வார வசூலை வெளியிட்டார்களா? இல்லையே! முதல் வாரத்தின் மூன்றில் ஒரு பங்கு கூட வசூலாகவில்லை. எவ்வித பண்டிகையும் இல்லாமல் 1958 ல் வெளியான "நாடோடி மன்னன்" அப்போதே ரு57000 வசூலாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்தான் எம்ஜிஆர் என்ற மகாசக்தியின் வலிமை கைஸ்களுக்கு முழுமையாக புரிந்திருக்கும். "பறக்கும் பாவை" அய்யனின் படங்களை பறக்க விட்ட காட்சி மகா அற்புதம்.

'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பார்கள் அதுபோல் "நவரத்தினம்" தோல்வி படம் என்று நீங்கள் கூறினாலும் அதனுடைய வசூலை நீங்கள் மகாவெற்றி படங்கள் என்று சொல்லும் அய்யனின் படங்களால் நெருங்க முடிந்ததா? அதுதான் வசூல் சக்கரவர்த்திக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். எத்தனை காலம் ஒரு திரைப்படம் தியேட்டரில் ஓட்டப்பட்டது என்பது முக்கியமில்லை. அது ஓடும் போது எவ்வளவு வசூல் குவித்தது என்பதே முக்கியம்.

நன்றி நடிகப் பேரரசர்...

Leave a Reply