TamilsGuide

கிழங்கன் வைத்தியசாலை சம்பவம் குறித்து நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

தவறான முடிவெடுத்து உயரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, இன்றும் நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர் மற்றும் யுவதிகளால் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த மாதம் 23ஆம் திகதி ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா, கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிணஅறையில் வைக்கப்பட்டிருந்தது.

எனினும் வைத்தியசாலையில் பணியாற்றிய மூன்று ஊழியர்கள் பாலியல் ரீதியாக இழுக்கு ஏற்படுத்தியதாக வைத்தியசாலை அதிகாரிகளால் சந்தேகம் வெளியிடப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பல நாட்களாகியும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை எவ்வித சட்டரீதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரபட்டது.

இதேவேளை,  இரண்டாவது நளாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் எபோட்ஸ்லி. புலோரன்ஸ். மாஸ்க்.மொன்டிபெயார் லெதண்டி. பன்முர் ஆகிய தோட்டங்களை சேர்ந்த 500கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

டிக்கோயா நகரத்தில் காலை 10மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது டிக்கோயா நகரத்தில் இருந்து கிழங்கன் ஆதார வைத்தியசாலைவரை பேரணியாக பதாதைகளை ஏந்தியவாறு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாவையினை முற்றுகையிட்டதால் வைத்தியசாலையின் வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

ஹட்டன் ஏபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 23ம் திகதி 23வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து குறித்த யுவதி 23ம் திகதி மாலை டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு சடலத்தை உறவினர்கள் கொண்டு வந்ததை அடுத்து யுவதியின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டது.

பிரேத அறையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறி கடந்த செவ்வாய்க்கிழமையும் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை வைத்தியசாலையில் பணிபுரியும் குறித்த மூன்று சிற்றுழியர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு கோரியே மக்கள் இன்றைய தினமும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

வைத்தியசாலையின் பாதுகாப்பு கருதி வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்ட காரர்களின் நடவடிக்கை காரணமாக தமது சேவைகளுக்கு இடையுரு விளைத்ததாக கூறி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையினால் வைத்தியசாலையின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டது.
 

Leave a comment

Comment