எம்ஜிஆர் வில்லனாகவும் ரஞ்சன் கதாநாயகனாகவும் நடித்து 1945 இல் வெளியானது
சாலிவாகணன் படம்.
சாலிவாகணன் படப்பிடிப்பில் அனைவரும் எதிர்பார்த்த வாட் சண்டைக்காட்சி துவங்கிய நாள் முதல் எம் ஜி ஆர், ரஞ்சன் இருவருக்குமிடையே முட்டல் மோதல் புகைந்து கொண்டே இருந்தது .
ஒரு நாள் உச்சகட்டத்தில் அது வெடிக்கவும் துவங்கியது. இருவருமே விட்டுக்கொடுக்காமல் ஆக்ரோஷமாக மோத ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு என்பதை மறந்து ரஞ்சனின் வாள் தனிப்பட்ட முறையில் எம் ஜி ஆரின் உடலை பதம் பார்க்கத் துவங்க எம் ஜி ஆர் இயக்குனர் பி. என். ராவிடம் முறையாக புகார் செய்யத் துவங்கினார். ஆனால் இயக்குனருக்கோ சண்டை அட்டகாசமாக வருகிறது இதை எதற்கு தடுக்க வேண்டும் என்ற எண்ணம்.
வேறு வழியில்லமால் எம்ஜிஆரும் தற்காப்புக்காக தன் முழுத்திறமையும் வாள் வீச்சில் வெளிப்படுத்தத் துவங்கினார் . ரஞ்சனுக்கு இது பிடிக்கவில்லை .ஒரு ஹீரோவிடம் வில்லன் நடிகர் விட்டுக்கொடுப்பது சினிமா மரபு. ஆனால் எம் .ஜி .ஆர் விட்டுக்கொடுக்காமல் சரிக்கு சமமாகச் சண்டை செய்வதை ஜீரணிக்க முடியவில்லை . இதனால் ரஞ்சன் எம் ஜி ஆரை கட்டுப்படுத்த ஒரு தந்திரோபாயத்தில் இறங்கினார்
பிற்பாடு ரஞ்சன் திரையுலக வாழ்க்கையின் இருளடைவுக்கு இதுபோன்ற அற்ப செயலகளும் ஒரு காரணமோ என எண்னத்தோணும் ஒரு கீழ்மையான செயல்
அப் படத்தின் சண்டைப்பயிற்சியாளர் ஒரு வட இந்தியர். அவருடன் சேர்ந்து எம் ஜி ஆருக்கு உடல் ரீதியாக சில நெருக்கடிகளைக் கொடுக்கும்படி சண்டைக்காட்சிகளை அமைக்க முடிவு செய்தனர் இதனால் எம் ஜி ஆர் வழக்கம் போல துணிசலாக சண்டைசெய்ய முடியமால் போனது மட்டுமல்லாமல் சில நேரங்களில் இயக்குனரிடம் அவமானப் படும்படியான நெருக்கடியும் உண்டானது. ரஞ்சன் மற்றும் சண்டைபயிற்சியாளரின் இச்செயல் படபிடிப்புக் குழுவில் இருந்த அனைவரும் அறிந்திருந்தனர் என்றாலும் யாரும் இது குறித்து பேசவில்லை.
அச்சமயம் அப்படத்தில் துணை நடிகராக சண்டைக்காட்சியில் நடித்த ஒரே ஒரு தமிழர் மட்டும் எம் ஜி ஆரின் மனக்குமுறலை அறிந்து அவரை ஓய்வறையில் சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறினார். ராமச்சந்திரா கஷ்டப்படாதே சினிமாவில் உனக்கும் ஒரு காலம் வரும் அன்று நீ நாயகனாக நடித்து வெற்றி வாகை சூடுவாய் . உன்னிடம் அதற்கான எல்லா தகுதியும் இருக்கிறது என ஆறுதல் வார்த்தை கூற உடனே எம்ஜி ஆரும் அவர் கைகளை பிடித்து நெகிழ்ச்சியுடன் நன்றி எனக்கூற நன்றியை எனக்கு வார்த்தையாகக் கூறாதே, அப்படி ஒரு சமயம் வரும்போது எனக்கு கால்ஷீட் கொடு நான் உன்னை வைத்து 100 படம் எடுக்கிறேன் என்றார். அப்படி சொன்னவர் வேறு யாருமலல் பிற்பாடு எம் ஜி ஆரை வைத்து பல படங்கள் தயாரித்து வெற்றி வாகை சூடிய சாண்டோ எம் சின்னப்பா தேவர்.
Palani Yappan


