TamilsGuide

மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. 

தமிழ் சினிமாவின் கிங் ஆஃப் ஓப்பனிங் (King of Opening) என்றாலே அது அஜித் தான். இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் முதல் நாள் மாபெரும் வசூல் வேட்டையாடும். குறிப்பாக தமிழ்நாட்டில் இவரை அந்த விஷயத்தில் வீழ்த்த ஆளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

AK 64 படத்தின் அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் AK 66 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மங்காத்தா கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதுபற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

சரி, AK 64 ஆதிக், AK 66 வெங்கட் பிரபு என்றால், AK 65 படத்தை யார் இயக்கப்போகிறார் என்கிற கேள்வி எழும். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புள்ளது என்கின்றனர். ஆனால், இது உறுதியான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment

Comment