TamilsGuide

உலக மேடையில் வெற்றி வாடை சூடிய ஈழத்தமிழன்

கிரேக்கத்தில் நடைபெற்ற மதிப்புமிக்க சமையல் போட்டியில், இலங்கை தமிழ் ஈழத்தில் பிறந்த தமிழ் சமையல்காரரான chef Thanu அவர்கள் குறிப்பிடத்தக்க சர்வதேச மைல்கல்லை எட்டியுள்ளார், இது அவரது தாய்நாட்டிற்கும் அவர் வாழும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் chef Thanu அவர்கள் இத்தாலி நாட்டின் குடியுரிமை கொண்ட சமயல் கலை நிபுணராக அறியப்படுகின்றார்.

இவர், கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்ற இவருக்கு வெள்ளிப்பதக்கமும், Greece culinary professional என்னும் அதியுயர் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அத்துடன் Serbia நாட்டைச்சேர்ந்த ICU Honorary Member DANIJELA PANTIC VLAHOVIC அவர்களிடருந்து சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில், 15 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையிலே தனுராஜ் ரவிராஜ் இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியின் நடுவர்களாக உலகத்தரம் வாய்ந்த போட்டிகளின் தமைமை நடுவர்களான Andy Cuthbert - President Worldchefs (World Association of Chefs Societies), Dimitris Kyriakopoulos - President Culinary Professionals, George Damianou - Continental Director of Southern Europe, Roberto Beltramini - Chief of Judges, Christos Gkotsis - Organizing Chairman SECC 2026 ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்தவகையில், அவர்களின் மதிப்பீட்டிலேயே Chef தனுவிற்கான குறித்த அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment