ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற உழவு இயந்திரடத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த ஏழு பேர் உட்பட 10 பேர் காயமடைந்து ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


