TamilsGuide

ஸ்பைடர் மேன் பட ஜோடி டாம் ஹொலண்ட் - ஜெண்டயாவுக்கு திருமணம் முடிந்தது.. 

ஹாலிவுட் நடிகரான டாம் ஹொலண்ட் (Tom Holland) ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் நடித்து உலகளவில் உள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் கூட, இவரை பார்த்தால் ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது ஸ்பைடர் மேன் மட்டும்தான். அடுத்ததாக இவர் நடிப்பில் Odessy மற்றும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது.

ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் டாம் ஹொலண்டுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ஜெண்டயா (Zendaya). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

கடந்த ஆண்டு நெருங்கிய குடும்ப உறவுகள் மத்தியில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளிவந்தது. ஜெண்டயா தனது கை விரலில் அணிந்திருந்த மோதிரம் கூட வைரலானது.

இந்நிலையில், ஜெண்டயா - டாம் ஹொலண்ட் ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மார்ச் 1ஆம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது. ஆனால், இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வெளிவரவில்லை. இருந்தும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இணையதளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். 
 

Leave a comment

Comment