அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
3-வது நாளாக நடைபெறும் இந்த தாக்குதல் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, கத்தார் தலைநகர் தோகா, பக்ரைன், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் அமெரிக்காவின் 27 ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரானின் சாஹேத்-136 ரக டிரோன்கள் மூலம் எண்ணெய் ஆலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உலகின் மிகப் பெரிய பெட்ரோலிய பொருட்களை வழங்கும் சுத்திகரிப்பு நிலையம் ஆகும். இதனால் உலகம் முழுவதும் இதனுடைய எதிரொலிப்பு அதிகளவில் இருக்கும்.
வளைகுடா நாடுகளில் உள்ள ஈரான் தாக்குதல் நடத்தி வருவதற்கு சவுதி அரேபியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் மீது ஈரான் தனது கூடுதல் கவனத்தை செலுத்தி அதிரடியான இந்த தாக்குதலை நடத்தியது.


