இன்ஸ்டாவில் கோலியை முந்தி விஜய் - ராஷ்மிகா ஜோடி சாதனை
சினிமா
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வெளியிட்டதிருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது.
இந்நிலையில், ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் திருமண புகைப்படங்கள் குறித்த பதிவு ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்ற பதிவாக மாறியுள்ளது.
விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்த பதிவை விட ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு அதிக லைக்குகள் பெற்று இந்த சாதனையை படைத்துள்ளது.
கோலி பகிர்ந்த புகைப்படம் 22.9 மில்லியன் லைக்குகளை கடந்து நிலையில், ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா பகிர்ந்த திருமண புகைப்படம் 24.4 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
வருகிற மார்ச் 4-ந்தேதி விஜய் தேவரகொண்டாவுக்கும்-ராஷ்மிகாவுக்கும் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் இந்திய திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்த இருக்கின்றனர்.























