இலங்கையில் தலைவர் செய்த விண்ணை அளந்த சாதனைகள்
இலங்கை
" கின்னஸ் சாதனை என்று நாமெல்லாம் பிரமித்து சொல்லும் சாதனைகளுக்கு மேலாக ஒரு சாதனை உண்டென்றால் அது நிச்சயம் நம் தலைவனின் சாதனையாகத்தான் இருக்கும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை என்பது உறுதி,
உண்மையிலேயே திகைப்பாக இருக்கிறது நமக்கு,
ஒரு மனிதன் மறைந்து 38 ஆண்டுகள் ஓடிவிட்டது, அதிலும் திரை உலகை விட்டு 48 ஆண்டுகள் கடந்து விட்டது,
அப்படிப்பட்ட ஒரு மனிதனுடைய படங்கள் இன்றைக்கும் பல திரையரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்து வெற்றி வாகை சூடுகிறது என்றால் நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை,
சகோதரர் சாமுவேல் அவர்களின் தொகுப்பின் படி இன்றைய நிலையில் (23/02/2026 ) சுமார் 31 ஊர்களில் 32 அரங்குகளில் தலைவரின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன,
குமரியிலிருந்து சென்னை வரை மட்டும்தான் தலைவரின் கொடி பறக்குமா என்ன?
அண்டை மாநிலமான புதுவையிலும், கர்நாடகாவிலும், கேரளாவிலும் எங்கு நோக்கினும் தலைவர் படங்கள் வெற்றிப் பவனி வருகிறது,
அதிலும் குறிப்பாக " நினைத்ததை முடிப்பவன் " பெங்களூருவில் வாரா வாரம் திரையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், ரசிகர்களும் சளைக்காமல் திரை அரங்குகளில் குவிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்,
ஞாயிறு காட்சிகளில் சர்வ சாதாரணமாக 500 டிக்கெட்டுகளுக்கு மேல் போகிறது என்றால் இதெல்லாம் உலக அதிசயம் அல்லவா 👍🏻👍🏻,
அரசகட்டளை, மலைக்கள்ளன், பாக்தாத் திருடன் படங்கள் இப்போது வெளியாகி பட்டையைக் கிளப்புகிறது என்றால் ஆனந்தமும், கண்ணீரும் ஒரு சேர வருகிறது,
இப்படி ஒரு சாதனை கணேசன் படங்களுக்கு நிகழ்ந்திருக்கும் என்றால் இதற்கு முன் டிரம்ப் வந்தே ஆகவேண்டும் ஈரானை பின்னாடி பாருங்க, முதலில் எங்க கணேசன் சாதனையை வெள்ளை மாளிகையில் சுவத்துல பதிச்சே ஆகணும்னு இங்கே கிரைண்டர் ஓட்டுபவர், முருகேசன், போண்டா மணின்னு ஒரு கூட்டமே கிளம்பியிருக்கும் ஆனா அது முடியாமப் போச்சு 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
தலைவரின் "ரிக் ஷாக்காரன் 1971 ல் வெளியாகி வசூலில் பிரளயமே ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில் 50 நாட்களில் 50 லட்சம் வசூலை அசுரத்தனமாக வசூலித்ததால் அந்த விபரங்களை ஒவ்வொரு ஊர் வாரியாக சத்யா மூவீஸ் வெளியிட்டு மின்னி மறையும் நட்சத்திரங்கள் மத்தியில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒரே சூரியன் தலைவர் என்ற வாசகங்களுடன் விளம்பரம் வந்தது,
உடனே வழக்கம் போல் நம்முடைய கணேசன் குஞ்சுகள் நாங்களும் இருக்குறோம்ல என்ற ரேஞ்சில் 1972 ல் "ராஜா" படம் அதே தேவி பாரடைஸ் அரங்கில் வெளியிடப் பட்டது,
எப்படியாவது ரிக் ஷாக்காரனை மிஞ்சியே ஆக வேண்டும் என்ற வெறி கணேசன் குஞ்சுகளுக்கு மட்டுமல்ல பாலாஜிக்குமே ஏற்பட்டு விட்டது,
விளைவு பாலாஜியின் பணத்தில் கிழி ராசா கிழின்னு வர்றவன், போறவனுக்கெல்லாம் ஓசி டிக்கெட் கொடுத்து 50 வது நாள் வசூல் என்று ஒரு வசூலைக் காட்டினார்கள், அது ரிக் ஷாக்காரன் 50 நாள் வசூலை விட கொஞ்சம் கூடக் காட்டி அவர்களே ஆறுதல் பட்டுக் கொண்டார்கள்,
சரி உண்மை நிலவரம் என்னான்னு பாத்துருவோமா 😀😀😀😀😀😀😀😀,
ரிக் ஷாக்காரன் வெளியான பிறகு " ராஜா" வெளியான சமயத்தில் தேவி பாரடைஸ் அரங்கில் டிக்கெட் கட்டணம் ஏற்றப் பட்டதன் காரணமாகவும், பாலாஜி எப்படியாவது தலைவரின் சாதனையை முறியடித்தே தீர வேண்டும் என்று ரொம்ப பிரயத்தனப் பட்டதன் விளைவாகவும் எப்படியோ " தேவி பாரடைஸ் " அரங்கில் மட்டும் 50 வது நாள் வசூலை கூட்டிக் காட்டி திருப்தி பட்டுக் கொண்டார்கள் பாவம் 😀😀😀😀😀😀😀😀😀😀😀,
அப்புறம் என்னாச்சு?? 😀😀😀😀😀😀😀,
50 வது நாளோட ராசா படுத்தவர்தான் அப்புறம் கடைசி வரைக்கும் எந்திரிக்கவே இல்லை, எவ்வளவு முயற்சி செய்தும் ராசா தலைவர் வசூலின் பக்கத்தில் கூட வரமுடியவில்லை அதே தேவி பாரடைஸ் அரங்கில்,
அவமானத்தோட ராசா கூசாவாகிப் போனார்,
அது மட்டுமா " பட்டிக்காடா பட்டணமா " 50 வது நாள் வசூலையும் வெளியிட்டுப் பார்த்தார் மாதவன்,
மொத்தம் 30 லட்சம் கூட தேறவில்லை, அப்புறம் வசந்த மாளிகை இப்படியெல்லாம் தலை கீழாக நின்றும் தலைவரின் ரிக் ஷாக்காரன் சாதனையை நெருங்கக் கூட முடியவில்லை,
அதைப் பற்றி பின்னாளில் தேவி பாரடைஸ் நிர்வாகம் பேட்டி கொடுத்தபோது ரிக் ஷாக்காரன் வசூலை அதன் பிறகு வந்த உலகம் சுற்றும் வாலிபன் தான் முறியடித்தது என்று குறிப்பிட்டார்,
திரு. ஆர். எம். வீ அவர்கள் சொல்லும் போது ரிக் ஷாக்காரனை விட இன்னொரு படம் அதிக நாட்கள் ஓடலாம், ஆனால் அந்தப் படத்தின் வசூலை எந்தக் கொம்பனாலும் முறியடிக்க முடியாது என்று குறிப்பிட்டார்,
இறுதியில் நம் தலைவரின் ரசிகர்கள் ரிக் ஷாக்காரனின் வசூல் சாதனையை போஸ்டராகவே அடித்து " சாந்தி " தியேட்டரிலேயே கொண்டு ஒட்டி கணேசன் ரசிகர்களுக்கு ஆப்பு சொருகுனது தனிக் கதை, 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
கணேசனுக்கு தன்னுடைய படங்களின் நிலவரம் என்னான்னு நல்லாவே தெரியும், அதனாலதான் அவசரஅவசரமாக காமராசரைப் பிடித்து உமாபதிக்கு சொந்தமான " சாந்தி " அரங்கை தன் வசப் படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் கூடவே " கிரவுன், புவனேஸ்வரி என்று குத்தகை அரங்குகளையும் வைத்து அவருக்கு அவரே படங்களை ஓஓஓஓட்டிக் கொண்டார் 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀,
1961ல் " பாவ மன்னிப்பு " தொடங்கி கடைசி வரை சாந்தி அரங்கின் சாதனைகள்??????? 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄சொல்லி மாளாது,
முதல் படத்திலேயே பட்டம் பறக்க விட ஆரம்பித்து அப்புறம் " சந்திரமுகி " என்ற படத்தை " ஹரி தாஸ் " படத்தை முறியடிக்க ஆளில்லாமல் மூன்று வருடங்களுக்கு மேல் ஓட்டியதெல்லாம் சுவாரசியம் நிறைந்த கதை 😄😄😄😄😄😄😄😄,
அதிலும் " உலகம் சுற்றும் வாலிபன் " வசூல் சாதனையை சென்னையிலாவது முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியில் 😀😀😀😀😀😀 " தங்கப் பதக்கம் " படத்தை ஓடிய கடைசி நாள் வரை "House full " போர்டு போட்டு ஓட்டிய விந்தையை உலகம் கண்டது,
வாலிபன் படத்தின் சென்னை நகர வசூலான 23 லட்சத்தை விட ஒரு 500 ரூபாய் கூடக் காட்டி கடைசி நாள் வரை " ஹவுஸ் புல்லா " ஓடின படத்தை உடனே எடுத்து விட்டார்கள்,
உலக வரலாற்றில் முதன் முறை ஹவுஸ் புல்லா ஓடுற படத்தை தூக்குவது எப்படிப்பட்ட சாதனை😀😀😀😀😀😀😀😀😀,
சிவாஜியின் தங்கை கணவர் வேணுகோபால் தான் சாந்தியின் மானேஜர்,
இப்படிப் பட்ட " குல்மால் " வேலையெல்லாம் பார்த்ததுக்கு மனுஷன் பாவத்தை தீர்க்க காசிக்கு போய் முங்கினாரோ இல்லை ராமேஸ்வரம் போய் முங்கினாரோ தெரியல 😄😄😄😄😄😄😄,
வேறு எந்த ஊரிலும் வாலிபனின் பக்கத்தில் கூட வர முடியாத தங்கப் பதக்கம் படத்தின் 50 நாள் ஓடிய திரை அரங்குகளின் விபரத்தை வெளியிட்டு விட்டு " இப் படத்தின் திரை உலகம் காணாத வசூல் சாதனையை அடுத்து வெளியிடுகிறோம் என்று சொல்லி விளம்பரம் கொடுத்தார் கணேசன்,
ஆனால் அதன்பிறகு படம் ஓஓஓஓடி முடிந்த கடைசி நாள் வரைக்கும் அந்த வசூல் சாதனை??? 😄😄😄😄😄😄😄 வெளியிடப் படவேயில்லை 😄😄😄😄😄😄😄,
ஒரு வேளை " கரகாட்டக்காரன் " படத்தில் கவுண்டமணி சொல்லுவார்ல " டேய் என் வாசிப்பைக் கேட்டு எத்தனை பேரு தலை சுத்தி நின்னுருக்கான், வாந்தி எடுத்துருக்கான், பேதி ஆகியிருக்கு " அப்படீன்னு, அதே போல வசூல் விபரத்தை வெளியிட்டால் ஏகப்பட்ட பேருக்கு வாந்தி, பேதியே ஆகிரும்னு விட்டுட்டார் போல கணேசன் 😀😀😀😀😀😀😀😀😀😀,
இலங்கையில் " வசந்தமாளிகை 200நாள், உத்தமன்200 நாள், பைலட் பிரேம்நாத் 200 நாள்னு கதை அளப்பானுக,
ஆனா வசூல் விபரத்தைக் கேட்டால்கண்டமேனிக்கு கதை அளப்பது இவனுகளோட வாடிக்கை,
சிவாஜி நடித்து இலங்கையில் வெளியான அத்தனை படங்களின் வசூலையும் சேர்த்தாலும் உலகம் சுற்றும் வாலிபன் வசூலை தொட்டுக் கூட பார்க்க முடியாது,
பண்ணி பலகுட்டி போட்டாலும் சிங்கம் போடும் ஒரு குட்டிக்கு ஈடாகுமா?
இந்தியாவில் வெளியாகி சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு 1976ல் இலங்கையில் வெளியாகி 25 லட்ச ரூபாய்களுக்கு மேல் வசூலைக் குவித்தது உலகம் சுற்றும் வாலிபன்,
ஆனால் கசந்த மாளிகை 7 லட்சத்துக்குள்ளும், உத்தமன் 5 லட்சத்துக்குள்ளும் முடங்கிப் போனது அன்றைய நிலவரம்,
இலங்கையில் தனி அரங்கில் 50நாளில் 5 லட்சத்துக்கு மேலும், ஓடிமுடிய 10 லட்சம் வசூலைக் குவித்தது உலகம் சுற்றும் வாலிபன்,
யாழ் நகரில் திரையிடப் பட்ட இரு அரங்குகளிலும் 60 நாளில் 4 லட்சம் வசூலைக் குவித்தது வாலிபன்,
மட்டக்களப்பு நகரில் முதன்முதலில் 100 நாட்கள் ஓடியதும், 2 லட்சம் வசூலைப் பெற்றதும் வாலிபன் ஒருவன்தான்,
யாழ் நகரில் பழைய படம் ஒன்று 1 லட்ச ரூபாய் வசூலைக் குவித்தது " விக்கிரமாதித்தன் " படம் மட்டும்தான்,
இலங்கையில் அடுத்தடுத்து மூன்று படங்கள் இரு அரங்குகளில் 100 நாட்களையும், தனி அரங்கில் 200 நாட்களையும் கண்டு அசுர சாதனை புரிந்தது தலைவர் மட்டும்தான்,
இதயக்கனி, நாளை நமதே, உலகம் சுற்றும் வாலிபன்,
தற்போது முகநூலில் பதிவிடும் " நவரத்தினம் கிரிதரன் " அவர்களின் கூற்றுப் படி மறு வெளியீட்டில் 100 நாட்கள் கண்ட படங்கள் " பாக்தாத் திருடன், ஒளி விளக்கு,
ஆறு மாதங்கள் தொடர்ந்து ஓடிய படம் " குலேபகாவலி "
இப்படி இன்னும் இலங்கையில் தலைவர் செய்த விண்ணை அளந்த சாதனைகள் அடுத்தடுத்து வெளி வரும்,
வணக்கத்துடன்,
ஜே. ஜேம்ஸ்வாட்,
குமரிக் கடற்கரை! (Thanks to mr. J. JamesWatt)























