• Welcome to TamilsGuide
செய்திகள் 1

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது

இலங்கை

500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நேற்று (27) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜெயலத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது, ​​பொலிஸார் 13 கிலோ கிராம் 32 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 14 கிலோ கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயினை பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருளுக்கு மேலதிகமாக, பெண் சந்தேக நபரிடமிருந்து 9 மி.மீ 30 தோட்டாக்கள் மற்றும் 3.8 மிமீ தோட்டாக்கள் 30 தோட்டாக்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தற்போது மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply