எப்ஸ்டீன் விவகாரம் - நீண்ட விசாரணைக்குள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன்
ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் தனக்கிருந்த தொடர்புகள் தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் நேற்று (27) பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தார்.
அவரது மனைவி ஹிலாரி கிளிண்டனிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர்களது இல்லத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.
தனது ஆரம்ப உரையில், "நான் எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து எதையும் பார்த்ததில்லை, எவ்விதத் தவறும் செய்யவில்லை" என்றும் எப்ஸ்டீன் குறித்துத் தெரிந்திருந்தால், தானே அவரை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணையின் போது பல கேள்விகளுக்கு "எனக்கு நினைவில்லை" என்ற பதிலையே அவர் அடிக்கடி பயன்படுத்தப் போவதாக முன்கூட்டியே எச்சரித்திருந்தார்.
2000-களின் தொடக்கத்தில் எப்ஸ்டீனின் விமானத்தில் கிளிண்டன் பயணம் செய்த புகைப்படங்கள் மற்றும் மேக்ஸ்வெல்லுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் குறித்துக் குழுவினர் கேள்வி எழுப்பினர்.
எப்ஸ்டீனின் 2008 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவருடனான தொடர்பை நிறுத்திவிட்டதாகக் கிளிண்டன் வாதிட்டதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.






















