TamilsGuide

இஸ்ரேலில் இருந்து இன்றே வெளியேறுங்கள் - ஸ்டாஃப்களுக்கு அமெரிக்க தூதர் தகவல்..

அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று ஜெனீவாவில் நடைபெற்றது.

இது தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். மேலும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபீ, தூதர் ஸ்டாஃப்களுடன் பேசியுள்ளார். அப்போது, "இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்பினால், அதை இன்றையே செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் வெளியேற விரும்புவோர், தாமதிக்காமல் சீக்கிரமாகப் புறப்படுவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் போர்க்கப்பல்களை குறி வைக்கும் வகையில், கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சீனாவிடம் இருந்து வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment

Comment