பிரான்ஸ் பரிசில் உள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் காத்திருந்தவர்கள் மீது மகிழுந்து ஒன்று பாய்ந்ததில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை பரிஸ் 10 ஆம் வட்டாரத்தின் Rue du Faubourg Saint-Denis வீதியில் இருந்த தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. மாலை 4.45 மணி அளவில் G7 டக்ஸி கார் ஒன்று திடீரென பஸ் தரிப்பிடத்துக்குள் வேகமாக நுழைந்தது.
விபத்தில் பேருந்து தரிப்பிடத்தில் நின்ற மூவர் காயமடைந்துடன், அவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கார் கட்டுப்பாட்டை இழந்தது விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.


