கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரி காதல் குறித்த செய்திகள் சமீப காலமாக கவனம் ஈர்த்துவருகின்றன.
இந்நிலையில், கேற்றி பெர்ரியுடனான தன் தந்தையின் காதல் குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோவின் மகன்.
கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, தன் முன்னாள் மனைவியான சோபியுடன் வாழும்போது, தம்பதியரின் பிள்ளைகள் குறித்து பொதுவாக செய்திகள் வெளியாவதில்லை.
சோபியும் ட்ரூடோவும் விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து, ட்ரூடோ பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரியைக் காதலித்துவருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ட்ரூடோவின் மகனான சேவியரை பேட்டி கண்டார் சமூக ஊடகப் பிரபலமான G Hobs.
அப்போது அவர், சேவியரிடம் கேற்றி பெர்ரி குறித்து கேள்வி எழுப்பினார்.
G Hobs சேவியரிடம், கேற்றி பெர்ரியை சந்தித்துள்ளீர்களா என கேட்க, அதற்கு, ஆம் என பதிலளித்த சேவியர், ’She’s cool, she’s nice’ என்றும் கூறினார்.
அத்துடன், நாங்கள் இசை குறித்து பல மணி நேரம் பேசினோம், அடுத்து நான் என்ன செய்வது என்பது போன்ற விடயங்கள் குறித்து அவர் எனக்கு ஆலோசனை கூறினார் என்றும் கூறினார் சேவியர்.
சேவியரும் இசைத்துறை சார்ந்தவர் ஆவார். ஆல்பங்களை வெளியிட்டு வரும் தனது மகனான சேவியரின் வீடியோக்களில் ட்ரூடோவும் அவ்வப்போது தலைகாட்டுவதுண்டு!


