அனுமதிப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து, விசாசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் நாளையதினம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து விவசாயம் செய்து வருகின்ற மக்களுக்கு அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும், உரித்து பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


